என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கிருமாம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

    கிருமாம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    மதுரை மாவட்டம் ராம்நாடு தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் தீபன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி முனிஸ்வரி. இவர் மாவட்ட மருத்துவமனை அதிகாரியாக உள்ளனார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது மூத்த மகன் கின்சன்காட்வின் (வயது22). இவர் புதுவை வில்லியனுரை அடுத்த உள்ள மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். கிருமாம்பாக்கம் அருகே பெலிக்கான்சிட்டி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி கின்சன்காட்வின் வீட்டில் ஜன்னலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது நண்பர்கள் பார்த்து தூக்கில் தொங்கிய கின்சன்காட்வினை மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கின்சன்காட்வின் பரிதாபமாக நேற்று இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த புகாரில் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாணவர் கின்சன்காட்வின் தங்கி இருந்த வீட்டிலும் விசாரணை நடத்தினர்.

    மேலும் மருத்துவ மாணவர் கின்சன்காட்வின் காதல் தோல்வியில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×