என் மலர்

    செய்திகள்

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பச்சிளம் குழந்தை
    X
    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பச்சிளம் குழந்தை

    பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற மர்மநபர் யார்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை சாக்கடை கால்வாயில் வீசிச் சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி குமரன்நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அருகில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.

    குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார், சாந்தி ஆகியோர், தொப்புள் கொடி கூட சரியாக அப்புறப்படுத்தாமல் கிடந்த அந்த குழந்தையை உடனடியாக பாதுகாப்பாக மீட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

    சாக்கடை கால்வாய் அருகே மீட்கப்பட்ட ஆண் குழந்தை ஈரத்தில் இருந்துள்ளதால் இதய துடிப்பு குறைந்து, மூச்சுத் திணறலுடன் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

    எனவே குழந்தையை இன்குபேட்டரில் வைத்து தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தை 2 கிலோ 260 கிராம் எடையுடன் உள்ளது. குழந்தை முற்றிலும் குணம் அடைந்தவுடன், கோவை கலெக்டர் அலுவலக குழந்தைகள் நலப் பிரிவில் ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.கோவை, பொள்ளாச்சி பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபடுவோரை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை சாக்கடை கால்வாயில் வீசிச் சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×