என் மலர்
செய்திகள்

100 சதவீத பேருந்துகளை இயக்க நடவடிக்கை: அரசு கொறடா பேட்டி
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கொண்டு 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு பணிமனையில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,
அரியலூர் மாவட்டம் முழுவதும் விடுப்பில் உள்ள அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் வெளியில் இருந்து உரிமம் பெற்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கொண்டு 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முறியடித்து 100 சதவிகித பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
Next Story






