என் மலர்
செய்திகள்

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: அச்சத்தில் பொதுமக்கள்
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. அந்த மின் கம்பிகள் மிக தாழ்வாக தொங்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. அந்த மின் கம்பிகள் மிக தாழ்வாக தொங்குகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நேற்று தனியார் கல்லூரி வாகனம் அந்த வழியாக சென்றது. அப்போது அந்த வாகனத்தின் மேல் பகுதி அந்த மின் கம்பியில் உரசியது.
இதனால் திடீர் தீப்பொறி எழுந்தது. வாகனத்தில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பெரிய விபத்து ஏற்படவில்லை.
சரக்கு லாரி ஒன்று அந்த வழியாக செல்ல வந்தது. அந்த பகுதியினர் ஏற்கனவே அச்சத்தில் இருந்ததால் சரக்கு லாரி செல்ல இருப்பதை மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் சரக்கு லாரி அந்த வழியாக சென்றது. மின் கம்பியால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து மினி பஸ்கள் சில மாற்று பாதையில் செல்கின்றன.
தாழ்வாக செல்லும் மின் கம்பி காரணமாக அந்த வழியாக செல்பவர்களும் மரண பயத்துடன் செல்கின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story