search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர சிகிச்சை மையம்
    X

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர சிகிச்சை மையம்

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ குழுக்கள் அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    டெங்கு காய்ச்சலை பரப்பும் மூலக்காரணிகளான தேங்காய் சிரட்டை, டயர், பயன் படுத்திய டீ கப், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தண்ணீர் தேக்கி வைக்கும் கலன்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கொசு மருந்து அடித்தல், காய்ச்சல் இருப்பவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகளையும் மருத்துவ குழுவினர் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் எ.ஈ.டி. தீவிர வாகனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு வீடியோ படக்காட்சியினை ஒளிபரப்பு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் ஒவ்வொரு அரசு மருத்துவ மனையிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான பிரத்யேகமான சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

    பொதுமக்கள் காய்ச்சலக்கான அறிகுறிகள் கண் டவுடனே தாமதப்படுத்தாமல், தள்ளி போடாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்வதை தவிர்த்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    தமிழகத்தில் டெங்கு போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் கூடுதலாக ரூ.13 கோடியே 95 லட்சம் செலவில் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×