search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் ‘புளூவேல்’ விளையாட்டு தொடர்பாக கணினி மையங்கள் கண்காணிக்கப்படும்: போலீஸ் சூப்பிரண்டு
    X

    தூத்துக்குடியில் ‘புளூவேல்’ விளையாட்டு தொடர்பாக கணினி மையங்கள் கண்காணிக்கப்படும்: போலீஸ் சூப்பிரண்டு

    தூத்துக்குடி மாவட்டத்தில் ‘புளூவேல்’ விளையாட்டு தொடர்பாக கணினி மையங்கள் கண்காணிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
    தூத்துக்குடி:

    காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் தொடக்க விழா தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் இன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘புளூவேல்’ விளையாட்டு ஒரு ஆபத்தான விளையாட்டு. இதனை யாரேனும் விளையாடுகிறார்களா? என்பதை கண்டறிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கணினி மையங்களும் கண்காணிக்கப்படும். அந்த விளையாட்டில் தங்களது குழந்தைகள் விளையாடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை.

    ‘புளூவேல்’ விளையாட்டில் 15 லெவல்கள் உள்ளன. முதல் லெவல் விளையாடிதும் அடுத்த லெவலில் விளையாட வேண்டும் ஆர்வத்தை தூண்டும். இறுதி லெவலலுக்கு சென்றதும் விளையாடுபவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது. மாணவர்களும் புளுவேல் விளையாட்டை விளையாடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×