என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கனமழைக்கு வாய்ப்புள்ள 13 மாவட்டங்கள்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    X

    கனமழைக்கு வாய்ப்புள்ள 13 மாவட்டங்கள்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    • தமிழகம், புதுச்சேரி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (2-ந் தேதி) தமிழகம், புதுச்சேரி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×