search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மறைவில்லா கால்பந்து மன்னர்: ரொனால்டோ -எம்பாப்பே உருக்கம்
    X

    மறைவில்லா கால்பந்து மன்னர்: ரொனால்டோ -எம்பாப்பே உருக்கம்

    • ஏழைகளுக்காக, கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார்.
    • விளையாட்டில் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க முடியாது

    பீலேவின் மறைவுக்கு பிரேசில் முன்னணி வீரர் நெய்மார் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், 'பீலேவுக்கு முன் கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது. பீலே அனைத்தையும் மாற்றினார். கால்பந்தை கலையாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றினார். ஏழைகளுக்காக, கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார். அவரால் கால்பந்தும், பிரேசிலும் மேம்பட்டன. அவர் மறைந்து விட்டார். ஆனால் அவரது 'மேஜிக்' எப்போதும் நிலைத்து நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    பீலேவை, 'கால்பந்து விளையாட்டின் ராஜா' என்று வர்ணித்துள்ள பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, 'விளையாட்டில் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க முடியாது' என்றார்.

    போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறும் போது, 'மறைவில்லா கால்பந்து மன்னர் பீலேவுக்கு சாதாரணமாக 'குட்பை' சொல்வது, கால்பந்து உலகம் முழுவதையும் தற்போது சூழ்ந்திருக்கும் வலியை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது. என்றென்றும் பல மில்லியன் மக்களுக்கு அவர் உந்துசக்தியாக இருப்பார். கால்பந்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரிடமும் அவரது நினைவுகள் நிலைத்து நிற்கும்' என்றார். அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, தன்னுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×