என் மலர்
டென்னிஸ்

Yuki Bhambri | இந்தியன் வெல்ஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர்-இத்தாலியின் ஆண்ட்ரியா வவசூரி ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 7-6 (7-2) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
Next Story






