என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ்- சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் அரீனா சபலென்கா 7-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இதில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஓல்கா டானிலோவிச் (செர்பியா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அரீனா சபலென்கா (பெலருசியா) மற்றும் மேரி பௌஸ்கோவா (செக்) ஆகியோர் மோதினர். இதில் சபலென்கா 7-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டத்தில் கிறிஸ்டினா புக்சா (ஸ்பானிஷ்), லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) சோனய் கர்தல் (இங்கிலாந்து) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
Next Story






