என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன்: ஆண்கள் இரட்டை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பாலாஜி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பாலாஜி, வரேலா ஜோடி அமெரிக்க ஜோடியுடன் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 74-வது இடத்தில் உள்ள பாலாஜி அவரது மெக்சிகன் ஜோடியான மிகுவல் ரெய்ஸ்-வரேலா மற்றும் அமெரிக்க ஜோடியான லெர்னர் டியென்- அலெக்சாண்டர் கோவாசெவிக் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்க ஜோடியான லேர்னர் டியென் மற்றும் அலெக்சாண்டர் கோவாசெவிச்சை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் பாலாஜி மற்றும் ரெய்ஸ்-வரேலா நான்காவது நிலை வீரர்களான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் மற்றும் அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபாலோஸுக்கு எதிராக 2-வது சுற்றில் மோதவுள்ளனர்.






