என் மலர்
டென்னிஸ்

தென்னிந்திய பல்கலைக்கழகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்கியது
- ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.
- அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்,வேந்தர் டாக்டர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அமெட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியை அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்,வேந்தர் டாக்டர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 90 பல்கலைக்கழகங்களில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்சுசீலா ராமச்சந் திரன், இணை வேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன், துணை வேந்தர் வி. ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர் மற்றும் போட்டியின் செயலாளர் ராம்குமார் கலந்து கொண்டனர்.






