என் மலர்
டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னரை வீழ்த்திய கஜகஸ்தான் வீரர்
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் சின்னர் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story






