என் மலர்
உலகம்

உலகின் தலைசிறந்த விமான நிலையங்கள்: டெல்லி, மும்பைக்கு எந்த இடம் தெரியுமா?
- நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
- ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாட்ரிட்:
பிரிட்டனில் செயல்பட்டு வருவது ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஆய்வு ஒன்றை நடத்தியது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த விமான நிலைய வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.
அதன்படி, உலகின் தலைசிறந்த விமான நிலைய உணவு, உலகின் தலைசிறந்த விமான நிலைய கழிவறை, ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையம் என பல்வேறு விருதுகளை சாங்கி விமான நிலையம் குவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டோஹா விமான நிலையமும், ஜப்பானின் டோக்கியோ விமான நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியாவின் 4 விமான நிலையங்கள் முதல் நூறு இடங்களில் இடம் பிடித்துள்ளன. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 32வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்திலும், ஐதராபாத் 56வது இடத்திலும், மும்பை விமான நிலையம் 76வது இடத்திலும் நீடிக்கின்றன.






