என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    கத்தார் ஓபன்: காலிறுதியில் நம்பர் 2 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
    X

    கத்தார் ஓபன்: காலிறுதியில் நம்பர் 2 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை7-5 என எம்போகோ வென்றார். பதிலடியாக 2வது செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகோ 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் உலகின் நம்பர் 2 வீராங்கனையான எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×