என் மலர்
டென்னிஸ்

கத்தார் ஓபன்: ரூப்லெவ், மெத்வதேவ் 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பெல்ஜிய வீரரான ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பெல்ஜிய வீரரான ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 6-3, 6-4 என போர்ச்சுக்கல் வீரர் நுனோ போர்ஜசை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story