என் மலர்
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்- அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு தகுதி
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமண்டா அனிசிமோவா மற்றும் வாங் சின்யு ஆகியோ மோதினர்.
- இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக சென்றது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் செக் ஜக்குப் மென்சிக் ஆகியோர் மோத இருந்தனர். ஆனால் செக் வீரர் காயம் காரணமாக விலகியதால் விளையாடமலே ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, அமெரிக்க வீரரான டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா மற்றும் சீன வீராங்கனை வாங் சின்யு ஆகியோ மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக சென்றது. முதல் செட்டை அமெரிக்க வீராங்கனை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டும் பரபரப்பாக சென்றது. ஆனாலும் இதிலும் அமெரிக்க வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு அமண்டா அனிசிமோவா தகுதி பெற்றார்.






