என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்- ஸ்வியாடெக்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்- ஸ்வியாடெக்

    • 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர் மற்றும் லூசியானோ டார்டேரி மோதினர்.
    • முதல் 2 செட்டை சின்னர் எளிதாக வென்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் அர்ஜெண்டினா வீரர் லூசியானோ டார்டேரி மோதினர்.

    முதல் 2 செட்டை சின்னர் எளிதாக வென்றார். 3-வது செட் பரபரப்பாக சென்றது இறுதியில் அந்த செட்டையும் சின்னர் கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு சின்னர் முன்னேறினார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் ஆஸ்திரேலியா வீராங்கனை மேடிசன் இங்கிலிஸ் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    Next Story
    ×