search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் நிதி உதவி
    X

    வினேஷ் போகத்

    இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் நிதி உதவி

    • காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்.
    • ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்கேரியா பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்.

    காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பல்கேரியா நாட்டின் பெல்மிகினில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நிதி உதவி வழங்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த முகாமில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 19 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரர் செரஃபிம் பாசர்கோ தலைமையின் கீழ், நடைபெறும் இந்த முகாமில் தமது உடலியக்க நிபுணர் அஷ்வினி படேலுடன் வினேஷ் போகத் கலந்து கொள்கிறார்.

    ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் வினேஷ் போகத் மற்றும் அவருடைய உடல நல நிபுணருக்கான விமானப்பயணக் கட்டணம், தங்குமிடம், உள்ளூர் பயணம் ,உணவு செலவு உள்ளிட்டவற்றிற்கு நிதி அளிக்கப்படுகிறது. இதர செலவுக்காக நாள் ஒன்றுக்கு 50 டாலர் படியாக வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×