என் மலர்
விளையாட்டு

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு அறிவிப்பு
- ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
- இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், இந்த மாதம் சென்னையில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த 42 வயதாகும் சரத் கமல் இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.
ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார். 2004-ம் அண்டு நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக சர்வதேச அளவில் பதக்கம் வென்றார்.
ஆசிய போட்டிகளில் இரண்டு முறை வெண்கல பதக்கமும், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கமும் வென்றுள்ளார்.
42 வயது ஆனாலும் சரத் கமல் டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ளது. இளம் வீரரான மனவ் தக்காரை விட 18 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளார்.
முதல் சர்வதேச தொடரை சென்னையில் தொடங்கிய சரத் கமல், சென்னையிலேயே தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கிறார்.






