என் மலர்
விளையாட்டு

Satwik | சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி
- சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
பாசெல்:
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் யமஷிதா-ஹிரோகி ஒகமுரா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-15 என முதல் செட்டை வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் ஜோடி 2வது செட்டை 21-15 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 28-26 என போராடி வென்றதுடன், காலிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.
Next Story






