என் மலர்

  விளையாட்டு

  நார்வே செஸ் போட்டி: 5-வது சுற்றில் கார்ல்செனை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்
  X

   விஸ்வநாதன் ஆனந்த்

  நார்வே செஸ் போட்டி: 5-வது சுற்றில் கார்ல்செனை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்
  • 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம், ஆனந்த் தோல்வி அடைந்தார்

  ஒஸ்லோ:

  உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார்.

  பரபரப்பாக நடைபெற்ற இந்த 5-வது சுற்றின் 50வது நகரில் கார்ல் சென்னை விழ்த்தி ஆனந்த் வெற்றி பெற்றார். இதன்மூலம், நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து அவர் முதலிடத்தில் உள்ளார்.

  கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

  முன்னதாக இந்த தொடரின் முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த், 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

  Next Story
  ×