என் மலர்
விளையாட்டு

நார்வே செஸ் போட்டி: குகேஷ்-க்கு ரிவஞ்ச் கொடுத்த அமெரிக்க வீரர்
- 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார்.
- 3-வது சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு நகமுரா பழிவாங்கியுள்ளார்.
ஸ்டாவஞ்சர்:
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் இந்த போட்டியில் 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார். இந்த போட்டியில் குகேஷை வீழ்த்தி நகமுரா வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு நகமுரா பழிவாங்கியுள்ளார். இந்த போட்டி கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது.
இன்னும் இரண்டு சுற்றுகள் மீதமுள்ள நிலையில், குகேஷ் 11.5 புள்ளிகளுடன் நகாமுராவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் அமெரிக்க ஜிஎம் கருவானா, எரிகைசியிடம் தோல்வியடைந்த போதிலும், 12.5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார்.
கார்ல்சன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் எரிகைசி 10.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.






