என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மெஸ்ஸி வருகை.. மைதான வன்முறை - விசாரணை ஆணையம் அமைப்பு - நிகழ்ச்சி ஏற்பட்டாளர் கைது
    X

    மெஸ்ஸி வருகை.. மைதான வன்முறை - விசாரணை ஆணையம் அமைப்பு - நிகழ்ச்சி ஏற்பட்டாளர் கைது

    • காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
    • முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணை ஆணையம் அமைத்தார்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்து டிக்கெட்டுகளை வாங்கினர்.

    அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.

    அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதற்கிடையே நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி ஜாவேத் சமீம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    Next Story
    ×