என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 24 Sept 2023 8:57 AM IST
ஆடவருக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் இரு இந்தியர்களில் யாரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
- 24 Sept 2023 8:56 AM IST
துடுப்பு படகு போட்டி: ஆண்களுக்கான போட்டியில் பாபு யாதவ் மற்றும் லேக் ராம் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- 24 Sept 2023 8:48 AM IST
டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் இந்திய வீராங்கனை அய்ஹிகா முகர்ஜி 3-1 என்ற கேம் கணக்கில் முதல் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா- தாய்லாந்து ஸ்கோர் 1-1 என சமநிலையில் உள்ளது.
- 24 Sept 2023 8:44 AM IST
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை இந்தியா அணி உறுதி செய்துள்ளது.
- 24 Sept 2023 8:32 AM IST
துடுப்பு படகு போட்டி: பெண்களுக்கான நான்கு பிரிவு இறுதி போட்டியில் இந்தியா 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம்.
- 24 Sept 2023 8:21 AM IST
டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் இந்திய வீராங்கனை முகர்ஜி 18.6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
- 24 Sept 2023 8:12 AM IST
டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். தற்போது முகர்ஜி விளையாடி வருகிறார்.
- 24 Sept 2023 7:45 AM IST
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி வெள்ளி வென்றது. மூன்று பேரும் இணைந்து 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றனர். சீனா அணி 1896.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.











