என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 29 Sept 2023 5:45 PM IST
ஹாக்கி
மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 6-0 என்ற அடிப்படையில் அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொள்ள இருக்கிறது.
- 29 Sept 2023 5:07 PM IST
பெண்கள் குத்துச்சண்டை
இந்தியாவின் நிகாத் ஜரீன் காலிறுதி போட்டியில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹனன் நாசரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- 29 Sept 2023 4:28 PM IST
பெண்கள் ஹாக்கி
மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற நிலையில் முன்னிலை
- 29 Sept 2023 3:53 PM IST
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி
உலகின் இரண்டாம் நிலை வீரரும், ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான வாங் சுகினிடம் சத்யன் ஞானசேகரன் தோல்வி.
- 29 Sept 2023 2:05 PM IST
குத்துச்சண்டை: 71-80 கிலோ ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அக்ஷ்யா சாகர் கிர்கிஸ்தான் வீரரிடம் தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தார்.
- 29 Sept 2023 1:17 PM IST
சைக்கிளிங் டிரக் போட்டி: ஆண்கள் கெய்ரின் பஸ்ட் ரவுண்ட் ஹீட் -2 சுற்றில் இந்திய வீரர் டேவிட் பெக்கம் 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் டேவிட் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதே சுற்றில் மறுபரிசீலனை போட்டியில் ஹீட் - 2 சுற்றில் இந்திய வீரர் ஈசோவ் 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் ஈசோவும் சைக்கிளிங் டிரக் ஆண்கள் கெய்ரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- 29 Sept 2023 1:14 PM IST
ஈ ஸ்போர்ட்ஸ்: டோடா2 குரூப் ஏ போட்டி 1ல் இந்தியா - கஜகஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி கஜகஸ்தான் வெற்றிபெற்றது.
- 29 Sept 2023 1:10 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 4 பதக்கங்களை வென்றுள்ளார். 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆண்கள் அணியில் தங்கம், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆண்கள் பிரிவில் வெள்ளி, 10 மீட்டர் ரைபிள் ஆண்கள் அணியில் தங்கம் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளார்.
- 29 Sept 2023 12:24 PM IST
துப்பாக்கி சுடுதல் போட்டி 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆண்கள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 29 Sept 2023 12:22 PM IST
குத்துச்சண்டை: 57 கிலோ பிரிவில் பர்வீன் ஹூடா காலிறுதிக்கு முன்னேறினார். சீனா வீராங்கனையை 5-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.











