என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 30 Sept 2023 3:43 PM IST
ஸ்குவாஷ்:
இந்திய ஆண்கள் அணி 2-1 என்ற அடிப்படையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
- 30 Sept 2023 2:54 PM IST
ஸ்குவாஷ்: ஆண்கள் அணிக்கான இறுதி போட்டியில் பாகிஸ்தான் வீரரை சவுரவ் கோசல் வெற்றி பெற்று ஸ்கோரை 1-1 என சமன் செய்துள்ளார்.
- 30 Sept 2023 2:44 PM IST
குத்துச்சண்டை: ஈரானுக்கு எதிரான போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் நரேந்தர்.
- 30 Sept 2023 2:21 PM IST
பெண்கள் 3X3 கூடைப்பந்து: இந்தியா 16-6 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- 30 Sept 2023 2:20 PM IST
பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 4-ம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.
- 30 Sept 2023 1:17 PM IST
குத்துச்சண்டை: 51-57 கிலோ பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். குவைத் வீரர் வெளியேறியதால் (walkover) இந்திய வீரர் சச்சின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
- 30 Sept 2023 1:12 PM IST
ஸ்குவாஷ்: ஆண்கள் பிரிவுக்கான இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
- 30 Sept 2023 1:03 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களைப் பெற்று 5ம் இடத்தில் உள்ளது.
- 30 Sept 2023 1:00 PM IST
டென்னிஸ் : கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் போபண்ணா - ருதுஜா ஜோடி 3-வது சுற்றை (டை பிரேக்கர்) 10-4 என கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
- 30 Sept 2023 12:52 PM IST
டென்னிஸ் : கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் போபண்ணா - ருதுஜா ஜோடி 2வது செட்டை 6-3 என கைப்பற்றினர். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றான டை பிரேக்கரில் 5-1 என முன்னிலையில் உள்ளது.















