என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 1 Oct 2023 1:46 PM IST

      குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 57-60 கிலோ பிரிவின் காலிறுதி போட்டியில் வடகொரியா வீராங்கனை வெற்றி பெற்றதால் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார்.

    • 1 Oct 2023 1:20 PM IST

      பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ரப் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதி சுற்றில் 6-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    • 1 Oct 2023 12:19 PM IST

      செபக்டக்ரா: ஆண்கள் 4பேர் குரூப்-பி ஆட்டத்தில் ஜப்பானிடம் 0-2 என வீழ்ந்தது இந்தியா.

    • 1 Oct 2023 12:17 PM IST

      ரோலர் ஸ்கேட்டிங்: ஆண்களுக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் இறுதி போட்டியில் விக்ரம் 4ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். மற்றொரு வீரர் ஆர்யன்பால் சிங் 7-வது இடத்தை பிடித்தார்.

    • 1 Oct 2023 12:17 PM IST

      ரோலர் ஸ்கேட்டிங்: பெண்களுக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை கார்த்திகா ஜெகதீஸ்வரன் 5-ம் இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    • 1 Oct 2023 12:02 PM IST

      குத்துச்சண்டை: 54-57 கிலோ எடை பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பர்வீன் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 5:0 என்கிற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார்.

    • 1 Oct 2023 10:56 AM IST

      ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிலிப்பைன்ஸை 2-0 என இந்தியா வீழ்த்தியது.

    • 1 Oct 2023 10:52 AM IST

      ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களைப் பெற்று 4-ம் இடத்தில் இந்தியா உள்ளது.

    • 1 Oct 2023 10:46 AM IST

      பிரிட்ஜ்: ஆண்கள் அணியில் ரவுண்ட் ராஃபின் 2-5ல் இந்தியா தென்கொரியாவை வீழ்த்தியது.

    • 1 Oct 2023 10:45 AM IST

      பிரிட்ஜ்: கலப்பு அணியில் ரவுண்ட் ராஃபின் 2-5ல் இந்தியா பிலிப்பைன்ஸை வீழ்த்தியது.

    Next Story
    ×