என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 3 Oct 2023 3:20 PM IST
ஸ்குவாஷ்:
பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் தன்வி கண்ணா போராடி தோல்வியை தழுவினார்.
- 3 Oct 2023 3:07 PM IST
பெண்கள் கபடி:
பெண்கள் கபடி இரண்டாவது குரூப் ஏ போட்டியில் தென் கொரியாவை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 56-23 என்ற அடிப்படையில் அமோக வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த போட்டியில் தாய்லாந்து அணியுடன் நாளை மோதுகிறது.
- 3 Oct 2023 1:21 PM IST
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 17-21, 16-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- 3 Oct 2023 1:14 PM IST
2-வது காலிறுதியில் ஹாங்காங் வெற்றி பெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.
- 3 Oct 2023 1:04 PM IST
பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டிரிசா ஜோலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-14, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- 3 Oct 2023 12:49 PM IST
வில்வித்தை ஆண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா கஜகஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்தார்.
- 3 Oct 2023 12:32 PM IST
வில்வித்தையில் ஆண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் 6-5 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார்.
- 3 Oct 2023 12:27 PM IST
தடகளம் பிரிவில் ஆண்கள் டெகத்லான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 6-ம் இடம் (கடைசி இடம்) பிடித்தார். ஒட்டுமொத்த தரவரிசையில் தேஜஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார்.
- 3 Oct 2023 12:18 PM IST
பெண்கள் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் தாய்லாந்து வீராங்கனையை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளார்.
- 3 Oct 2023 11:47 AM IST
பெண்கள் குத்துச்சண்டையில் 50-54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீதி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.








