என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 4 Oct 2023 12:46 PM IST

      நான்காவது காலிறுதி போட்டியில் மலேசியா வெற்றி பெற 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம்.

    • 4 Oct 2023 12:42 PM IST

      பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றியது.

    • 4 Oct 2023 12:28 PM IST

      4-வது காலிறுதியில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • 4 Oct 2023 12:12 PM IST

      வில்வித்தை கலப்பு ரிகர்வ் பிரிவில் இந்திய அணி, இந்தோனேசியாவிடம் ஷூட் அவுட் முறையில் தோல்வி அடைந்தது.

    • 4 Oct 2023 11:50 AM IST

      குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, சீனா தைபே வீராங்கனையிடம் தோற்று வெண்கலம் வென்றார்.

      இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • 4 Oct 2023 11:18 AM IST

      ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசியா அணியிடம் தோற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • 4 Oct 2023 10:53 AM IST

      பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் கொரியா அணி, இந்திய அணியை 21-15, 18-21, 21-13 என்ற செட்களில் தோற்கடித்தது. இதில் தோற்ற இந்தியா காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

    • 4 Oct 2023 10:29 AM IST

      பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியா, இந்தியாவை 21-18, 21-18 என்ற நேர் செட்களில் தோற்கடித்தது. இதில் தோல்வி அடைந்த இந்தியா காலிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

    • 4 Oct 2023 10:17 AM IST

      ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி 2-1 என ஹாங்காங் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    • 4 Oct 2023 9:58 AM IST

      3-வது காலிறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்.

    Next Story
    ×