என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரை காண இலவச டிக்கெட்
    X

    சென்னையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரை காண இலவச டிக்கெட்

    • ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 24 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

    சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. ஜூனியர் உலக கோப்பையில் அதிக அணிகளும், அதிக போட்டிகளும் நடைபெறும் தொடராக இது அமைந்துள்ளது.

    இந்த நிலையில் மாணவர்கள், இளம் விளையாடடு வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் ஹாக்கியை விரும்புவர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வகையில் இலவச டிக்கெட் அறிவிக்கப்படுகிறது என ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே தெரிவித்துள்ளார்.

    ticketgenie இணைய தளம் அல்லது ஹாக்கி இந்திய ஆப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். பேரார்வம் கொண்ட ரசிகர்களால் சூழ்நிலையை உருவாக்குவது எப்போதுமே மிகப்பெரிய பலம். எல்லோராலும் சர்வதேச ஹாக்கியை அணுக முடியம் என்பதை உருவாக்க உறுதிப்பூண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×