என் மலர்
விளையாட்டு

நார்வே செஸ் தொடர்: 9வது சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார் குகேஷ்
- நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
- ஒன்பதாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.
ஸ்டாவஞ்சர்:
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இதில் 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், சீனாவின் வெய் யீயைச் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.
ஒன்பதாவது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குகேஷ் 14.5 இரண்டாம் இடத்திலும், ஹிகாரு நகமுரா 13 புள்ளியுடன் 3வது இடத்திலும், பாபியானோ கருணா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அர்ஜூன் எரிகைசி 11.5 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் அணி சார்பில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 13.5 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைன் வீராங்கனை முதலிடத்தில் உள்ளார்.
Next Story






