என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நார்வே செஸ் தொடர்: 3வது சுற்றில் குகேஷ் அபார வெற்றி
    X

    நார்வே செஸ் தொடர்: 3வது சுற்றில் குகேஷ் அபார வெற்றி

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • 3வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள

    இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை வீழ்த்தினார். இந்தப் போட்டி 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.

    இரண்டாவது சுற்று ஆட்டத்திலும் குகேஷ், சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியிடம் தோல்வி கண்டார். 2 சுற்று ஆட்டங்களின் முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மற்றும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (தலா 4.5 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். 42வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியனான குகேஷ் 3 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    தனது 19-வது பிறந்த நாளான இன்று குகேஷ் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×