என் மலர்tooltip icon

    கால்பந்து

    2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றது பார்சிலோனா
    X

    2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றது பார்சிலோனா

    • 36 போட்டிகள் முடிவில் 85 புள்ளிகள் பெற்று முதலிடம்.
    • ரியல் மாட்ரிட் 78 புள்ளிகள் வெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை.

    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.

    2024-25 சீசனின் 36-ஆவது போட்டியில் பார்சிலோனா இன்று அதிகாலை எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. லேமின் யாமல் 53ஆவது நிமிடத்திலும், ஃபெமின் லோபஸ் (90+6) கடைசி நேரத்திலும் கோல் அடித்தனர்.

    இதன்மூலம் 36 போட்டிகளில் 27 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகள் மூலம் 85 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து லா லிகா கோப்பையை வென்றது. பார்சிலோனாவின் 28ஆவது லா லிகா கோப்பை இதுவாகும்.

    ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 24 வெற்றி, தலா 6 டிரா மற்றும் தோல்வி மூலம் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் பார்சிலோனா தோல்வி அடைந்து, ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள்தான் பெற முடியும். இதனால் பார்சிலோனா 2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.

    பார்சிலோனா கடைசி 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.

    Next Story
    ×