என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வாஷிங்டன் சுந்தர் அபாரம்.. இந்தியாவுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
- இந்தியாவும் 387 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை சமன் செய்தது.
- இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. இந்தியாவும் 387 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை சமன் செய்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸ் அளவு ஆடவில்லை. பென் டக்கெட் (12), ஆலி போப் (4), ஜாக் கிராலி (22), ஹாரி புரூக் (23) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
ஜோ ரூட் (40) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (33) சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்தை 192 ரன்களுக்குள் சுருட்டினர். எனவே இந்தியாவிற்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






