என் மலர்
கிரிக்கெட் (Cricket)

WPL 2026: தீப்தி சர்மா அரை சதம்: RCB அணிக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த UP
- தீப்தி சர்மா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி உபி அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லெனிங் மற்றும் தீப்தி சர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. லெனிங் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. ஒருமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற உபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






