என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: திண்டுக்கல் அணிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி
- திருச்சி தரப்பில் வசிம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த கவுசிக்9, சஞ்சய் யாதவ் 1, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வசிம் 41 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதனை அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.






