என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
    X

    டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 182 ரன்கள் விளாசியது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியால் 159 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இன்று பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் விளாசியது. தொடக்க வீரர் குர்பாஸ் 43 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 15 பந்தில் 35 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. முதல் 4 வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ரோவ்மன் பொவெல் 27 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். மேத்யூ போர்டு ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 52 ரன்கள் விளாசினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×