என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பயத்தை காட்டிய இத்தாலி பேட்ஸ்மேன்கள்: 24 ரன்னில் வெற்றி பெற்ற இங்கிலாந்து
    X

    பயத்தை காட்டிய இத்தாலி பேட்ஸ்மேன்கள்: 24 ரன்னில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

    • ஜஸ்டின் மோஸ்கா அபாரமாக விளையாடி 34 பந்தில் 43 ரன்கள் விளாசினார்.
    • பென் மனென்டி 25 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இத்தாலியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்க இங்கிலாந்து தள்ளப்பட்டது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இத்தாலி களம் இறங்கியது. கத்துக்குட்டி அணியான இத்தாலி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு கடும் சவால் விட்டது.

    தொடக்க வீரர் அந்தோணி மோஸ்கா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜே.ஜே. ஸ்மட்ஸ் பந்துகள் சந்தித்து ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ஜஸ்டின் மோஸ்கா அபாரமாக விளையாடி 34 பந்தில் 43 ரன்கள் விளாசினார்.

    கேப்டன் மனென்டி 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த பென் மனென்டி, கிரான்ட் ஸ்டீவாரட் இங்கிலாந்து மரண பயத்தை காட்டினர். பென் மனென்டி 25 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் விளாசினார். ஸ்டீவர்ட் சிக்சராக பறக்க விட்டார். 17-வது ஓவரில் 2 சிக்சரும், 18-வது ஓவரில் 2 சிக்சருடன் பறக்கவிட்டார்.

    இதனால் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 19-வது ஓவரை சாம் கர்ரன் சிறப்பாக வீசியதுடன் ஸ்டீவர்ட்டை அவுட்டாக்கினார். ஸ்டீவர்ட் 23 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் சாம் கர்ரன் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரில் 25 ரன்கள் இத்தாலிக்கு தேவைப்பட்டது. ஓவர்டன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இத்தாலி 20 ஓவரில் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    Next Story
    ×