என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இரட்டை சதத்தை தவறவிட்ட பதும் நிசங்கா: 3-ம் நாள் முடிவில் இலங்கை 368/4
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.
- இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
காலே:
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்னும், லஹிடு உதரா 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடியவே வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.






