என் மலர்
கிரிக்கெட் (Cricket)

NZvsSA | வரலாற்றில் முதல் முறை: நியூசிலாந்தில் வரலாறு படைக்கப்போகும் தென் ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்காவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் ஒரே நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.
- ஒரே மைதானத்தில் மதிய வேளையில் பெண்கள் அணியும், இரவு வேளையில் ஆண்கள் அணியும் விளையாட உள்ளன.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, தென் ஆப்பிரிக்காவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் ஒரே நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன. இந்தத் தொடர் நாளை தவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் அனைத்துப் போட்டிகளிலும், ஒரே மைதானத்தில் மதிய வேளையில் பெண்கள் அணியும், இரவு வேளையில் ஆண்கள் அணியும் விளையாட உள்ளன.
மார்ச் 15 அன்று தவுரங்காவில் முதல் போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஹாமில்டன் (17-ந் தேதி), ஆக்லாந்து (20-ந் தேதி), வெலிங்டன்(22-ந் தேதி) மற்றும் கிறிஸ்ட்சர்ச் (25-ந் தேதி) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
தென் ஆப்பிரிக்க ஆண்கள் அணிக்கு கேசவ் மகாராஜ் தலைமை தாங்குகிறார். பெண்கள் அணிக்கு நட்சத்திர வீராங்கனை லாரா வோல்வார்ட் தலைமை தாங்குகிறார்.
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளுமே தங்களது ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணிகளை ஒரே சுற்றுப்பயணத்தில் முழுமையாகக் களமிறக்குவது இதுவே முதல் முறை. குறிப்பாக, 2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள பெண்கள் டி20 உலகக்கோப்பைக்குத் தயாராக தென் ஆப்பிரிக்கப் பெண்கள் அணிக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானது.
டி20 தொடர் முடிந்த பிறகு, மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கப் பெண்கள் அணி மட்டும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.






