என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தொடரை வெல்லுமா இந்தியா: 271 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்காவின் டி காக் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரிங்கல்டன் - டிகாக் களமிறங்கினர். இதில் ரிங்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டி காக் கேப்டன் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய டி காக் அரை சதம் கடந்தார். பவுமா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே 24, மார்க்ரம் 1 என வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பிரேவிஸ் 29 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து யான்சென் 17, போஸ் 9, இங்கிடி 1 என வெளியேறினர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






