என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்
    X

    முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 168 ரன்கள் விளாசியது.
    • இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேமருன் கிரீன் 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், அப்ரார் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது.

    Next Story
    ×