என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதா? வேண்டாமா?- முடிவை தாமதப்படுத்தும் பாகிஸ்தான்
- வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளது.
- வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் நிலைப்பாடு எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோஹ்சின் நக்வி, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவியில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் ஷெரீப் உடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐசிசி விசயம் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் களத்தில் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை அனுப்ப வேண்டுமா? அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் தவிர்க்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதான் வங்கதேசத்திற்கு ஆதரவான முடிவாக இருக்கக்கூடும் எனவும் பாகிஸ்தான் நினைக்கிறது.






