என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நான் அந்த அணியை விரும்புகிறேன்.. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி
    X

    நான் அந்த அணியை விரும்புகிறேன்.. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி

    • நாங்கள் பலமுறை அந்தக் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்துவிட்டோம்.
    • ஆனால் எங்களால் அந்தக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9-வது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் இந்திய அணியின் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களால் துபாயில் நடைபெற்றன.

    இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இந்த தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டியை எட்டியது.

    இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக சாம்பியன் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்நிலையில் நான் அந்த அணியை விரும்புகிறேன் என சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அந்த அணியை விரும்புகிறேன். அவர்களுடன் விளையாடுவதை நான் விரும்புகிறேன். இது ஒரு வருட உழைப்பு அல்லது இரண்டு வருட உழைப்பு பற்றியது அல்ல.

    நாங்கள் பலமுறை அந்தக் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்துவிட்டோம். ஆனால் எங்களால் அந்தக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

    அங்குதான் எல்லோரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதை ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் செய்ய முடியாது. அந்த எண்ணத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அணியிடமிருந்து மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் டி20 உலகக் கோப்பைக்காகவும், பின்னர் சாம்பியன்ஸ் டிராபிக்காகவும் திட்டமிட்டபோது எனக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் அது உதவியது.

    என ரோகித் சர்மா கூறினார்.

    Next Story
    ×