என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தோத்துட்டே இருக்கியே டா.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி
    X

    தோத்துட்டே இருக்கியே டா.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது.

    இருவரும் அரை சதம் கடந்தனர். டேரில் மிட்செல் 76 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மேன் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.

    அடுத்து வந்த அப்பாஸ் அரை சதம் அசத்தினார். அடுத்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் 344 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- உஸ்மான் கான் களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்தது. 39 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மானும் 36 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து பாபர் அசாம் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான பாபர் அசாம் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 78 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சல்மான் ஆகா 58 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.

    Next Story
    ×