என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல் முறை தோற்றது போல பேசுகிறார்கள்- புவனேஸ்வர்குமார் கருத்து
- இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை.
- வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மும்பை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் யாரும் பதற்றப்படாமல் அமைதி காக்க வேண்டும் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி சுழற் பந்துவீழ்ச்சிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரித்தது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா வெற்றி பெற்றது.
வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஒரு பகுதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏதோ இதற்கு முன்பு தோற்றதே கிடையாது போலவும் இப்போதுதான் முதல் முறை தோற்று இருக்கிறோம் என்பது போலவும் அனைவரும் பேசுகிறார்கள்.
இந்தத் தோல்வி எனக்கு ஒன்றும் பெரிய கவலையை தரவில்லை. 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தழுவி இருப்பதால் ரசிகர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.






