என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2028 லாஸ் ஏஞ்சல்ஸ ஒலிம்பிக்: பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு சிக்கல்
- ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் முதல் இடம் பிடிக்கும் அணி தகுதி பெறும்.
- ஆசிய கண்டத்தில் ஐசிசி தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் இந்தியா தகுதி பெறும்.
2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம் பெறுகிறது. 1900-க்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளது.
ஆண்கள் அணி, பெண்கள் அணி என மொத்தம் 12 அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 பேர் இடம் பிடிக்க முடியும்.
6 அணிகளில் அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெறும். மற்ற அணிகளை ஆசியா, ஓசேனியா. ஐரோப்பா, ஆப்பிரிக்கா பிராந்திய அடிப்படையில் பிரித்து, அவற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெற வேண்டும். அப்படி செய்தால்தான் உலகளாவிய தொடராக இருக்கும் என ஒலிம்பிக் கமிட்டி விரும்புகிறது.
அதன்படி பார்த்தால் ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஓசேனியாவில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதன்படி பார்த்தால் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு அணிகள் ஒவ்வொரு கண்டத்தில் முதலிடம் பிடிக்கும் அணியாக இருக்கும். 5ஆவது அணி அமெரிக்கா. 6ஆவது அணி எப்படி தகுதி பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
2028ஆம் அண்டு ஜூலை 20 முதல் ஜூலை 29 வரை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா போன்ற அணிகள் அமெரிக்க கண்டத்தில் இடம் பெறும். அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் தகுதி பெறுவதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.






