என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக மெக் லேனிங் நியமனம்
    X

    பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக மெக் லேனிங் நியமனம்

    • டெல்லி அணியை 3 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் பெண்கள் பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார். இரண்டு முறை ஒருநாள் மற்றும் ஐந்து முறை டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இவரை உ.பி. வாரியர்ஸ் ஏலத்தில் 1.9 கோடி ரூபாய்க்கு எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அறிமுக சீசனான 2023-ல் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்து. 2024-ல் 4-வது இடமும், 2025-ல் 5-வது இடமும் பிடித்தது.

    மெக் லேனிங் இதற்கு முன்னதாக மூன்று சீசனிலும் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். மூன்று முறையில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    WPL தனது நான்காவது சீசனைத் தொடங்கும்போது, இந்த லீக் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள விதம், கிரிக்கெட்டின் தரம், போட்டித்தன்மை மற்றும் அற்புதமான புதிய வீராங்கனைகளின் திறமைகளின் எழுச்சி ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் தரத்தை உயர்த்தி வருவது பார்ப்பதற்கு நம்பமுடியாத வகையில் உள்ளது என மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் நவி மும்பையில் 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையிலும், வதோதராவில் ஜனவரி 19-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×