என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லீக்கை விட நாக்அவுட் முற்றிலும் மாறுபட்டது: பைனல் குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் ஸ்டேட்மென்ட்
- ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது.
- இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை தோற்கடித்திருந்தது.
லீக் போட்டியில் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா அபாரமாக இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
இந்தியா லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தாலும், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
நாளை இந்தியாவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், நாக்அவுட் போட்டி லீக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, எனவே, ப்ரஷாக தொடங்குவோம் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டி குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வொர்த் கூறியதாவது:-
நாக்அவுட் கிரிக்கெட் லீக் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரராக ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடியதை நாம் பார்த்ததுபோன்று, சிலர் நாக்அவுட் போட்டியில் விளையாடும் திறமையை பெற்றுள்ளனர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பார்த்து நாங்கள் செல்வோம் என்று நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா மிகவும் வலுவான அணி. அவர்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடியுள்ளனர். இதனால் அவர்கள் மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையில் இருப்பார்கள்.
நாங்கள் இறுதிப் போட்டியில் தோற்ற வரலாறு, லீக்கில் இந்தியாவை வீழ்த்தியது போன்ற வரலாற்றை கொண்டு வர முடியாது. நாங்கள் அவை அனைத்தும் அப்புறப்படுத்திவிட்டு முற்றிலும் ப்ரெஷயாக தொடங்க முயற்சிக்கிறோம்.
ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. ஏறக்குறைய டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.
இவ்வாறு லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.






